Tuesday, March 29, 2011

தேனி மாவட்டம்




தேனி மாவட்டம் (English:Theni district) தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் தேனி ஆகும்.
தேனி மாவட்டம் தமிழக அரசின் வருவாய்த்துறை அரசு ஆணை எண் 679, நாள் ஜூலை 251996 இன் மூலம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தேனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இந்த மாவட்ட உருவாக்கத்திற்காக இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான டாக்டர். கே. சத்யகோபால் தனி அதிகாரியாக முதலில் நியமிக்கப்பட்டார். பின்னர் அவரே முதல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். தேனி மாவட்டம் ஜனவரி 11997 முதல் செயல்படத் துவங்கியது. தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு, இந்தியாவில் முதன் முறையாக சர்வதேசத் தரச்சான்று (ஐ.எஸ்.ஓ.,-9001) விருது வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத் தலங்கள்


சுருளி நீர்வீழ்ச்சி
தேனி மாவட்டத்தில் முல்லைவைகை, வராக நதிகள் பாய்ந்து வளம் சேர்க்கின்றன. இதனால் இம்மாவட்டத்தின் பெரும் பகுதிகள் பச்சைப்பசேல் என்று இயற்கை அழகுடன் உள்ளது. இம்மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்கள் என்று 8 இடங்கள்உள்ளது.
  1. வைகை அணை
  2. முல்லைப் பெரியாறு அணை
  3. சோத்துப்பாறை அணை
  4. சுருளி நீர் வீழ்ச்சி
  5. கும்பக்கரை நீர் வீழ்ச்சி
  6. மேகமலை
  7. வெள்ளிமலை
  8. போடி மெட்டு